அடிலெய்டு : புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஆஷ்லே மாலெட் (Ashley Mallett) வெள்ளிக்கிழமை (அக்.29) அடிலெய்டில் காலமானார். அவருக்கு வயது 76.
ஆஷ்லே மாலெட் (Ashley Mallett) 12 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடினார். இந்த நாள்களில் 38 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.
இவர் இங்கிலாந்துக்கு எதிராக 1968ஆம் ஆண்டு அறிமுகமானார், அதேபோல் தனது கடைசி போட்டியையும் இங்கிலாந்து அணிக்கு எதிராகவே 1980இல் விளையாடினார்.
ஆஷ்லே மாலெட் சர்வதேச போட்டிகளில் 132 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 1972ஆம் ஆண்டு பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் 59 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
இது இவரின் சிறந்த கேரியர் ஆகும். ஆஷ்லே மாலெட் சிட்னியில் பிறந்தவர் ஆவார். பின்னர் இவர் பெர்த் நகருக்கு புலம்பெயர்ந்தார். ஆஸ்திரேலியாவின் வெற்றிகரமான சுழற்பந்து வீச்சாளர்களில் ஆஷ்லே மாலெட்டுக்கும் இடமுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : TRIBUTE TO CSK: ஆழ்கடலில் கிரிக்கெட்