லண்டன்:ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடரானது, உலகப்பிரசித்தி பெற்றது. 2021-2022 ஆஷஸ் தொடர், இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் ஆஷஸ் தொடர் நடத்தப்படுகிறது.
ஆண்களுக்கான முதல் ஆஷஸ் போட்டி, டிசம்பர் 8 – 12 பகலிரவு ஆட்டமாக பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்திலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 16 – 20 ஆகிய தேதிகளில் அடிலெய்ட் ஓவல் மைதானத்திலும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
பராம்பரியமான பாக்ஸிங்-டே டெஸ்ட்டான மூன்றாவது போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26 – 30 தேதிகளில் நடைபெறுகிறது.