தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

"டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும்" - முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி! - tendulkar

20 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சவால் அளிக்கும் என முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

"டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும்" - இந்திய முன்னாள் பயிற்சியாளர் கருத்து!
"டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும்" - இந்திய முன்னாள் பயிற்சியாளர் கருத்து!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 8:41 PM IST

ஹைதராபாத் : ஐசிசி கோப்பையை இந்திய அணி வென்று சரியாக 10 ஆண்டுகள் ஆகின்றன. கடைசியாக 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. இப்படியான குறையை இந்திய அணி நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் போக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்த அளவிற்கு இந்திய அணியின் செயல்பாடு உலகக் கோப்பை தொடரில் இருந்தது. ஆனால் இறுதி போட்டியில் எதிர்பாராத விதாமாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவியது. இந்த தோல்வி இந்திய ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் மனவலியையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி டி20 வடிவம், இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கின் தொடக்க விழாவில் பேசியுள்ளார். அதில் "இந்திய அணி மிக விரைவில் உலகக் கோப்பையை வெல்லும். அது 50 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பையாக இருக்காது.

ஏன்னெறால் நீங்கள் மீண்டும் அதற்கான அணியை உருவாக்க வேண்டும். ஆனால் 20 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பையில் இந்திய அணி மிகவும் சவாலானதாக இருக்கும். அதற்கான அனைத்து திறமைகளும் அணியிடம் உள்ளது. இது குறுகிய வடிவிலான போட்டியாகும். அதில் கவனம் செலுத்த வேண்டும்.

2023 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அற்புதமாக செயல்பட்டது. இருப்பினும், இறுதி போட்டியில் கோப்பையை வெல்ல முடியாமல் போனது வேதனை அளிக்கிறது. கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கருக்கே கோப்பையை வெல்வதற்கு 6 உலகக் கோப்பை தொடர்கள் தேவைப்பட்டன.

ஒரு பெரிய தொடரை வெல்வதற்கு அன்றைய நாளில் மிகச் சிறப்பாக நாம் விளையாட வேண்டும். முந்தைய போட்டிகளில் நாம் என்ன செய்தோம் என்பதெல்லாம் பொருட்டே இல்லை" இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படிங்க:டேவிஸ் கோப்பை டென்னிஸ்: 1976ஆம் ஆண்டுக்கு பிறகு டேவிஸ் கோப்பையை வென்றது இத்தாலி!

ABOUT THE AUTHOR

...view details