தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உலக கோப்பையில் இந்திய அணியை தோற்கடிப்பது கடினம்: ரிக்கி பாண்டிங் கருத்து!

Cricket World Cup 2023: அனைத்து துறைகளிலும் இந்திய அணி வலுவாக உள்ளதால், அவர்களை தோற்கடிப்பது கடினம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

Ricky Ponting
Ricky Ponting

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 6:27 PM IST

டெல்லி: 13வது ஐசிசி உலகக் கோப்பை கடந்த 5ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நடைபெற்ற 3 போட்டிகளிலுமே அபார வெற்றியைப் பெற்று +1.821 என்ற நெட் ரன்ரேட்டுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

இந்திய அணியின் மூன்று வெற்றிகளில், இரண்டு வெற்றிகளுக்கு அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு பேட்டராக சிறப்பாக பணியாற்றியுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 131 ரன்களும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 86 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், இந்திய அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதற்கு ரோஹித் சர்மாவுக்கு முக்கிய பங்கி உள்ளது. அதேநேரம் அவரது கேப்டன்சி சிறப்பாக உள்ளது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் புகழ்ந்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்; "ரோஹித் சர்மா மிகவும் இயல்பானவர். அவர் விளையாடும் போது கூட நீங்கள் அதை பார்க்கலாம். குறிப்பாக பேட்டிங்கில் சிறப்பாக விளையாடும் அவர் களத்தின் உள்ளேயும், வெளியேயும் இருப்பார்.

ஏனெனில் ஒரு கட்டத்தில் அழுத்தம் ஏற்பட்டாலும், அதை ரோஹித் சர்மா சமாளிப்பார். விராட் கோலியைப் போன்றவர்கள் உணர்வு பூர்வமானவர்கள். ரசிகர்களின் பேச்சுக்கு அசைவு கூடுக்க கூடியவர்கள். அவர் போன்ற ஆளுமையுடையவர்களுக்கு அது கடினமான ஒன்றாக இருக்கலாம்.

ஆனால் ரோஹித் சர்மா அதில் நன்றாகச் செயல்படக் கூடியவர். குறிப்பாக இந்திய அணியில் நீண்ட காலமாக நல்ல வீரராக இருந்து வருகிறார். மேலும், இத்தொடரில் தொடக்கம் முதலே இந்திய அணியைத் தோற்கடிப்பது கடினம் என நான் கூறி வருகிறேன். ஏனெனில் அவர்களிடம் திறமையான அணி இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சு மற்றும் மிடில் ஆடர் என அனைத்திலும் அவர்கள் வலுவாக உள்ளனர். அதன் காரணமாகவே எத்திரணிகளுக்கு அவர்களைத் தோற்கடிப்பது கடினமான ஒன்றாக இருக்கும். ஆனால் அதிகப்படியான நாக் அவுட் போட்டிகளில் அவர்கள் எப்படி தங்களை நிலை நிறுத்துகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க:பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் வெற்றி ரோஹித் சர்மாவையே சாரும்: முஷ்டாக் முகமது புகழாரம்!

ABOUT THE AUTHOR

...view details