தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மீண்டும் விராட் கோலிக்கு இடமில்லை - தவான் கேப்டன்; ரோஹித்துக்கு ரெஸ்ட்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான, ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு மீண்டும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

INDIAN SQUAD FOR zimbabwe ODI SERIES 2022
INDIAN SQUAD FOR zimbabwe ODI SERIES 2022

By

Published : Jul 30, 2022, 9:23 PM IST

மும்பை: இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாட ஜிம்பாப்வே நாட்டிற்கு வரும் ஆகஸ்ட் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஆக. 18ஆம் தேதி முதல் போட்டியும், ஆக. 20, 22 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த போட்டிகளிலும் நடைபெறுகின்றன. இந்த மூன்று போட்டிகளும் ஜிம்பாப்வே நாட்டின் தலைநகரான ஹராரேவில் உள்ள ஹராரே விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜூலை 30) அறிவித்துள்ளது.

சமீபத்தில், நடந்து முடிந்த மேற்கு இந்தியா தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை வழிநடத்திய ஷிகர் தவான் இத்தொடரிலும் கேப்டனாக தொடர்கிறார். மேற்கு இந்திய தீவுகள் அணியுடனான தொடரில் இடம்பெற்றிருந்த சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், ஜடேஜா, யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு இதில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

முந்தைய தொடரை போலவே விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஒருநாள் அணியில் ஓய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், தீபக் சஹார் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுவரை ஒரு சர்வதேச போட்டிகளைக் கூட விளையாடாத ராகுல் திரிபாதிக்கு முதல்முறையாக ஒருநாள் போட்டிக்கான அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

ஜிம்பாப்வோ தொடருக்கான இந்திய அணி:ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சஹார்.

இதையும் படிங்க:டி -20 ஜாம்பவான்களை பந்தாடிய இந்தியா! இளம் வீரர்கள் அசத்தல்...

ABOUT THE AUTHOR

...view details