இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. இவரது தந்தை திரிலோக்சந்த் ரெய்னா.
இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு காசியாபாத் நகரில் உள்ள தனது இல்லத்தில் தங்கி சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில் உடல்நிலை மோசமடைந்ததன் காரணமாக, திரிலோக்சந்த் ரெய்னா இன்று (பிப்.6) தனது சுயநினைவை இழந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த சுரேஷ் ரெய்னா உடனடியாக தனது வீட்டிற்கு விரைந்துள்ளார். இவருடைய பூர்வீக ஊர், ஜம்மு காஷ்மீரில் உள்ள ரெய்னாவாரி என்ற கிராமம் ஆகும்.
காஷ்மீர் பண்டிட்களின் துன்புறுத்தலுக்குப் பிறகு, இவரது குடும்பம் காஷ்மீரை விட்டு வெளியேறி காசியாபாத்தில் வசிக்கத் தொடங்கியது.