தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

Virat Kohli Records: சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி! - Indian Cricket Virat Kohli

Cricket World Cup 2023: வங்கதேசம் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய அணியின் வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 26,000 ரன்களை கடந்தார். இதன் மூலம் அதிகவேகமாக இந்த ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Virat Kohli
Virat Kohli

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 11:05 PM IST

புனே: ஐசிசி உலகக் கோப்பை கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று (அக்டோபர் 19) அதன் 17வது லீக் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்து மிரட்டினார். சதம் அடித்தது மட்டுமல்லாமல் அதன் மூலம் பல சாதனைகளையும் படைத்துள்ளார் விராட் கோலி.

முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்கள் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே அற்புதமாக விளையாடியது. தொடக்க வீரரான ரோஹித் சர்மா அரைசதம் நோக்கி நெருங்கிய வேளையில் எதிர்பாராதவிதமாக 48 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து களம் புகுந்த விராட் கோலி தனது வழக்கமான நிதான ஆட்டத்தின் மூலம் அரைசதம் அடித்தார். அதைத் தொடர்ந்து சதமும் விளாசி அசத்தினார். இறுதியில், இந்திய அணியும் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. விராட் கோலி இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார்.

இந்த போட்டியின் போது அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 26,000 ரன்களை கடந்தார். இதன் மூலம் 26,000 ரன்களை கடந்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், இந்த போட்டியில் அவர் 35 ரன்களில் இருந்த போது, இலங்கை அணியின் மூன்னால் வீரரான் மஹேலா ஜெயவர்தனேவின் சாதனையை முறியடித்தார். முன்னதாக ஜெயவர்தனே 725 இன்னிங்ஸ் விளையாடி 25,957 ரன்கள் எடுத்திருந்தார்.

தற்போது விராட் கோலி 567 இன்னிங்ஸ்களில் 26,000 கடந்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 782 இன்னிங்ஸ் விளையாடி 34,357 ரன்கள் எடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். மேலும், இந்த 26,000 ரன்களை கடப்பதற்கு சச்சின் எடுத்துக் கொண்ட இன்னிங்ஸ் 601 ஆகும். ஆனால் விராட் கோலி 567 இன்னிங்ஸிலேயே 26,000 ரன்கள் கடந்து, அதிவேமாக 26,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை தனதாக்கியுள்ளார்.

இதையும் படிங்க:India Vs Bangladesh: கில், கோலி அசத்தல்.. இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details