ஹைதராபாத்:ஐசிசி உலகக் கோப்பை தொடர் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்திய அணி விளையாடிய 7 போட்டிகளிலுமே வென்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டரான ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த போட்டியின் முடிவுக்குப் பின்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஷார்ட் பால் குறித்த கேள்விக்குக் காட்டமாகப் பதில் அளித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து ஸ்ரேயாஸ் ஐயரின் தந்தை சந்தோஷ் ஐயர் ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்; "ஸ்ரேயாஸ் ஐயர் ஷார்ட் பால்க்கு எதிராகத் தடுமாறுகிறார் என்பது தவறான ஒன்று. அவர் சிறந்த விளையாட்டு வீரர். பொதுவாக ஒவ்வொரு வீரருக்கும் விளையாட்டில் பலம் மற்றும் பலவீனம் இருக்கும். அதனை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.