மொஹாலி : இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜன. 11) பஞ்சாப்பின், மொஹாலியில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் இன்னிங்சை விக்கெட் கீப்பர் ரஹ்மன்னுல்லா குர்பஸ் மற்றும் கேப்டன் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் தொடங்கினர். நிதானமாக விளையாடிய இந்த ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்தது.
ரஹ்மன்னுல்லா குர்பஸ் 23 ரன்களில் அகசர் பட்டேல் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் இப்ராஹிம் சத்ரன் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும் முன்னாள் கேப்டன் முகமது நபி பொறுப்புடன் விளையாடி அணி கவுரமான ஸ்கோரை அடைய உதவினார்.
அசமனுதுல்லா ஓமர்சாய் 29 ரன், ரஹ்மத் 3 ரன், முகமது நபி 42 ரன் என குவித்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அனி 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அக்சர் பட்டேல், முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஷிவம் துபே 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.