மூன்று 20 ஓவர் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி, நேற்று தனது முதல் டி20 போட்டியில் களம் கண்டது. இப்போட்டி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங்கில் களம் கண்ட தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3, ஹர்ஷர் படேல் மற்றும் சாஹர் தலா 2 மற்றும் அக்ஷர் ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.