ஹராரே:ஜிம்பாப்வேவில் இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது போட்டி ஹராரே மைதானத்தில் இன்று (ஆக 18) தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்த வகையில், முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி வீரர்கள் 40.3 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.
அதிகபட்சமாக ரெஜிஸ் சகாப்வா 51 பந்துகளுக்கு 35 ரன்களை எடுத்தார். அதேபோல பிராட் எவன்ஸ் 29 பந்துகளுக்கு 33 ரன்களையும், ரிச்சர்ட் 42 பந்துகளுக்கு 32 ரன்களையும் எடுத்தனர். மறுப்புறம் பந்து வீச்சில் இந்திய வீரர்கள் தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, அக்சர் படேல் தலா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர்.