தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IND Vs WI: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்! - ishan kishan

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதவுள்ள டெஸ்ட் தொடர் இன்று கரீபியா தீவு நாடுகளில் ஒன்றான டொமினிகாவில் தொடங்குகிறது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 12, 2023, 11:12 AM IST

Updated : Jul 12, 2023, 11:44 AM IST

ஹைதராபாத்:இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டு ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் இன்று (ஜூலை 12) மாலை டொமினிகாவில் தொடங்குகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வியுடன் வரும் இந்தியாவும், ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெறாமல் துவண்டு இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதும் தொடர் இது. இதில் வெற்றி பெற்று தன்னை மீட்டுக் கொள்ளும் கட்டாயத்தில் இரு அணிகளும் இருக்கிறது.

2023 - 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியை இந்தப் போட்டியில் இருந்து இந்தியா தொடங்குகிறது. தோல்விகளில் இருந்து மீண்டு வர இந்திய அணி மாற்றங்களுடன் இந்த போட்டியில் களமிறங்குகிறது. இதில் அனுபவமிக்க புஜாராவை வெளியேற்றி, இளம் விரரான ஜெய்ஸ்வால் என அதிரடி முடிவுகளை தெரிவித்துள்ளது.

வெஸ்ட் இண்டிஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் வீரரான ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களம் இறங்க உள்ளார். மேலும், ஜெய்ஸ்வால் முதல் தர கிரிக்கெட்டில் மும்பைக்காக இன்னிங்ஸை தொடங்கிய அனுபவம் அவருக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஷுப்மன் கில்லை பொறுத்தவரை, டெஸ்ட் கிரிக்கெட்டில் அனுபவம் உள்ளவர்.

ஒன் டவுன் இடத்திற்கு பொருத்தமாக இருப்பார். மேலும், இந்திய அணிக்காக ரோஹித், கோலி இருவருமே ரன் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மறுவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள ரஹானே சரியாக அவருடைய பங்களிப்பை அளிக்கத் தவறினால் அவர் இடத்தைப் பிடிக்க ருதுராஜ் இருக்கிறார்.

சுழல் பந்து வீச்சை பொறுத்தவரை, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இருக்கின்றனர். ஷமி, பும்ராவுக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. சிராஜ், ஹர்துல் தாக்குர் ஆகியோரோடு முகேஷ் குமார், நவ்தீப் சைனி, உனத்கட் உள்ளனர். விக்கெட் கீப்பரைப் பொறுத்தவரை, ரிஷப் பண்ட் இல்லாதது இந்திய அணிக்கு ஒரு பெரிய குறையாகவே இருந்து வருகிறது. அவர் இல்லாத இடத்தை பரத் விளையாடி வந்தார். ஆனால், இடது கை பேட்டராக உள்ள இஷான் கிஷான் அந்த இடத்தில் விளையாட வைக்க அணி முனைப்பு காட்டும்.

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யாஜஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்கிய ரஹானே (துணை கேப்டன்), ஸ்ரீகர் பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷண் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், அக்ஷர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெயதேவ் உனத்கட், நவ்தீப் சனி.

வெஸ்ட் இண்டீஸ்: கிரெய்க் பிரத்வெயிட் (கேப்டன்), ஜெர்மெய்ன் பிளாக்வுட் (துணை கேப்டன்), ஜோஷுவா டா சில்வா (விக்கெட் கீப்பர்), அலிக் அதானஸி, ரகீம் கார்ன்வால், ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்ஜாரி ஜோசஃப், ரேமன் ரீஃபர், கெமர் ரோச், தேஜ்நாராயன் சந்தர்பால், கிர்க் மெக்கன்ஸி, ஜோமெல் வாரிக்கன்.

இந்த டெஸ்ட் போட்டி இன்று மாலை 7.30 மணிக்கு டொமினிகாவில் உள்ள வின்ஸ்டர் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதையும் படிங்க:ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: அப்ஸ்டாக்ஸ் அணி அறிவிப்பு!

Last Updated : Jul 12, 2023, 11:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details