மும்பை:13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் 33வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டிஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஆரம்பமே அதிர்ச்சி:இலங்கை அணியின் மதுஷங்கா வீசிய முதல் பந்தை பவுண்டரியுடன் தொடங்கிய ரோகித் சர்மா, இரண்டாவது பந்தில் கிளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். விராட் கோலி மற்றும் சுப்மான் கில் ஆகியோர் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.