ராஜ்கோட்:தென்னாப்பிரிக்கா-இந்தியா இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று (ஜூன் 17) குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள எஸ்சிஏசி மைதானத்தில் தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் தெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய வீரர்கள் களமிறங்கினர்.
தொடக்க ஆட்டக்காரான ருதுராஜ் கெய்க்வாட் 7 பந்துகளில் 5 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அவருடன் களமிறங்கிய இஷான் கிஷன் 26 பந்துகளுக்கு 27 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். மூன்றாவதாக களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் வெறும் 2 பந்துகளில் ஆட்டமிழந்து அதிச்சியளித்தார்.
கேப்டன் ரிஷப் பந்த் 23 பந்துகளுக்கு 17 ரன்களுடன் வெளியேறவே அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் கூட்டணி அதிரடியாக ஆடி அணிக்கு வலுசேர்த்தது. அந்த வகையில் பாண்டியா 31 பந்துகளுக்கு 46 ரன்களையும், கார்த்திக் 27 பந்துகளுக்கு 55 ரன்களையும் எடுத்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்களை எடுத்தனர். மறுப்புறம் பந்துவீச்சில் லுங்கி எங்கிடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அந்த வகையில் 170 ரன்கள் வெற்றி இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியுள்ளது. முன்னதாக நடந்த முதல் இரு ஆட்டங்களில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. மூன்றாவது ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இங்கிலாந்து கிரிக்கெட் அணி உலக சாதனை