தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

India vs Ireland t20: தொடரை தக்க வைக்குமா அயர்லாந்து? இன்று 2வது போட்டி!

Ind vs Ire 2nd t20 : இந்திய - அயர்லாந்து இடையேயான 2வது டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்தியா - அயர்லாந்து டி20
India vs Ireland t20

By

Published : Aug 20, 2023, 10:03 AM IST

டப்ளின்: ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் விளையாடி வருகிறது. இதன் முதல் டி20 போட்டி கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி இரவு டப்ளின் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் 2வது இன்னிங்சில் மழை குறிக்கிட்டதால், டிக்வொர்த் லிவீஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தொடரில் இந்திய அணி 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி20 போட்டி இன்று (ஆகஸ்ட். 20) இரவு அதே மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த போட்டியில் இந்தியா அணி திறம்பட பந்துவீசி அயர்லாந்து அணியை 139 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். இந்தியா அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் ஏறத்தாழ 11 மாததிற்கு பிறகு திரும்பி வந்தார்.

ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் ஒருநாள் உலக கோப்பை நெருங்கி வருவதால், வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மீது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. அதை பூர்த்தி செய்யும் வகையில் அவரது பந்துவீச்சு அமைந்து இருந்தது. அவர் வீசிய முதல் ஓவரிலேயே 2 விக்கெட்கள் எடுத்து மீண்டும் நிரூபித்தார்.

அதே போல் காயத்தில் இருந்து மீண்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்கள் எடுத்து அசத்தினார். இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியின் வீரர் ஜெய்ஸ்வால் ஒரு நல்ல தொடக்கம் தந்து ஆட்டமிழந்தார். பின்னர் களம் வந்த திலக் வர்மா சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மழை குறிக்கிட்டதால் அத்துடன் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. இதனால் பின்னர் விளையாட இருந்த பேட்டர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போனது.

இதையும் படிங்க:Virat Kohli: 500 கி.மீ. ஓடிய அபூர்வ நட்சத்திரம்.. 15 ஆண்டுகளாக கடந்து வந்த பாதை!

ரூதுராஜ், சாம்சன், துபே, ரிங்கு சிங் போன்றவர்களுக்கு எதிர்வரும் இரு போட்டிகளும் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. சஞ்சு சாம்சன் வர இருக்கும் ஒருநாள் உலக கோப்பையில் அவருக்கான ஒரு இடத்தை உறுதி செய்ய நல்ல ரன்களை எட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதே போல் ரிங்கு சிங், துபே, ரூதுராஜ் போன்றவர்கள் அடுத்த ஆண்டு வரும் டி20 உலக கோப்பையில் அவர்களை பரிசீலனை செய்ய ஒரு நல்ல தாக்கத்தை எற்படுத்த வேண்டும்.

அயர்லாந்து அணியை பொறுத்தவரை இந்த தொடரை தக்க வைக்கும் முனைப்பில் உள்ளனர். முதல் ஆட்டத்தில் 39 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தனர். ஆனால் பாரி மெக்கார்த்தி மற்றும் கர்டிஸ் கேம்பர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு ஒரு கவுரவமான ஸ்கோரை பெற்று தந்தனர். வேகப்பந்து வீச்சாளர் கிரேக் யங் அடுத்தடுத்து 2 விக்கெட்களை எடுத்து கலக்கினார்.

இரு அணிகளின் விவரம்:

இந்தியா: ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கட் கீப்பர்), ரிங்கு சிங், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), அர்ஷ்தீப் சிங் அல்லது அவேஷ் கான்.

அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி, லோர்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அடேர், பாரி மெக்கார்த்தி, கிரேக் யங், ஜோசுவா லிட்டில், பெஞ்சமின் வைட்.

இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இதையும் படிங்க:Ind Vs Ire T20 : 2 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி... வருண பகவான் சேட்டையால் டக் வொர்த் விதியில் முடிவு!

ABOUT THE AUTHOR

...view details