தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மகளிர் உலகக் கோப்பை: வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா பேட்டிங்

மகளிர் உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

india-vs-bangladesh-womens-world-cup-2022-toss-update
india-vs-bangladesh-womens-world-cup-2022-toss-update

By

Published : Mar 22, 2022, 7:16 AM IST

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் 2022 தொடர் நியூசிலாந்து நாட்டில் நடந்துவருகிறது. இந்த தொடரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, வங்க தேசம், பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

இன்றைய 21ஆவது லீக் ஆட்டத்தை இந்தியா-வங்கதேச அணிகள் தொடங்கின. முதலில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டகாரர்களான ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா களமிறங்கி உள்ளனர். இந்தியா புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. வங்கதேசம் ஏழாவது இடத்தில் உள்ளது.

இந்திய அணி வீராங்கனைகள்: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, மிதாலி ராஜ்(கேப்டன்), ஹர்மன்ப்ரீத் கவுர், ரிச்சா கோஷ்(கீப்பர்), சினே ராணா, பூஜா வஸ்த்ரகர், ஜூலன் கோஸ்வாமி, ராஜேஸ்வரி கயக்வாட், பூனம் யாதவ்.

வங்கதேச அணி வீராங்கனைகள்:ஷர்மின் அக்தர், முர்ஷிதா காதுன், ஃபர்கானா ஹோக், நிகர் சுல்தானா(கேப்டன்/கீப்பர்), ருமானா அகமது, ரிது மோனி, லதா மொண்டல், சல்மா காதுன், நஹிதா அக்டர், ஃபஹிமா காதுன், ஜஹானாரா ஆலம்.

இதையும் படிங்க:IN vs WI: சதம் விளாசிய இந்திய கிரிக்கெட் மகாராணிகள்

ABOUT THE AUTHOR

...view details