விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்ற நிலையில், தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியுள்ளது. காயம் காரணமாக ஹார்திக் பாண்டியா ஒய்வு பெற்ற நிலையில், சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்துகிறார்.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மேத்யூ ஷார்ட் களம் இறங்கினர். நல்ல தொடக்கத்தை கொடுக்க இந்த ஜோடி முதல் விக்கெட்டை 31 ரன்களில் இழந்தது. மேதீவ் ஷார்ட் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஜோஸ் இங்கிலிஸ் - ஸ்மித்துடன் கைக்கோர்த்தார். இந்த ஜோடி அணிக்கு ரன்களை குவித்து வந்தது. அதிரடியாக ஆடிய இங்கிலிஸ் அரைசதம் கடக்க, மறுபக்கம் நிதானமாக விளையாடிய ஸ்மித் அரைசதம் கடந்து ரன் அவுட் ஆனார். இருப்பினும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜோஸ் இங்கிலிஸ் 47 பந்துகளில் சதம் விளாசினார்.
இதன் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசினார். அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்ததுள்ளது. இதனைத் தொட்ர்ந்து இந்திய அணி 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகின்றது.
இதையும் படிங்க:2024ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் - ஐசிசி அதிரடி அறிவிப்பு!