தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

Ind Vs Aus : டாஸ் வென்று ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு!

இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு செய்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 6:34 PM IST

Updated : Nov 28, 2023, 6:40 PM IST

கவுகாத்தி : இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆஸ்திரேலிய அணி தலா 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நடந்து முடிந்தது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த நவம்பர் 23ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது.

அந்த ஆட்டத்தில் கடைசி பந்தில், இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 26ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

5 போட்டிகள் தொடரை 2-க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பரசபரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (நவ. 28) நடைபெறுகிறது. இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை 3-க்கு 0 என்ற கணக்கில் வெல்ல இந்திய அணி திட்டமிட்டு உள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளும் நல்ல நிலையில், பேட்டிங்கில் தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர். அதேநேரம் பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னாய், முகேஷ் குமார் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆட்டங்களை போல் இந்த ஆட்டத்திலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் தொடர் இந்தியாவுக்கு என்பதில் துளியும் சந்தேகமில்லை. அதேநேரம், ஆஸ்திரேலிய அணியை எளிதில் கணக்கிட முடியாது. கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் சுமித் உள்ளிட்டோர் நிலைத்து நின்று விளையாடினால் அது இந்திய அணிக்கு கடுமையான தருணம் என்பதில் சந்தேகமில்லை. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

போட்டிக்கான இரு அணி வீரர்களின் பட்டியல் :

இந்தியா :இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ரின்கு சிங், திலக் வர்மா, அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா.

ஆஸ்திரேலியா :மேத்யூ வேட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், சீன் அபோட், நாதன் எல்லிஸ், தன்வீர் சங்கா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.

இதையும் படிங்க :India Vs Aus : இந்தியா அபார வெற்றி! இந்திய பந்துவீச்சில் வீழ்ந்தது ஆஸ்திரேலியா!

Last Updated : Nov 28, 2023, 6:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details