41.3 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 261 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணியை வீழ்த்தியுள்ளது.
Ind Vs Ban live update: கோலி சதம்.. 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி! - இந்தியா வங்கதேசம் உலக கோப்பை கிரிக்கெட்
Published : Oct 19, 2023, 1:45 PM IST
|Updated : Oct 19, 2023, 9:27 PM IST
21:18 October 19
India Vs Bangladesh : இந்திய அணி வெற்றி!
21:10 October 19
India Vs Bangladesh : கோலி சதம்!
சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி சதம் விளாசி அசத்தியுள்ளார்.
20:57 October 19
India Vs Bangladesh : வெற்றிக்கு இன்னும் 48 ரன்கள் தேவை!
இந்திய அணி 36 ஓவர்களுக்கு 3 விக்கெட்கள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்த நிலையில், வெற்றிக்கு இன்னும் 48 ரன்கள் தேவையாகயுள்ளது.
20:39 October 19
India Vs Bangladesh : 31 ஓவர்கள் முடிவில்!
31 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 188 ரன்கள் சேர்த்துள்ளது. விராட் கோலி 59 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 6 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.
20:32 October 19
India Vs Bangladesh : 3வது விக்கெட்டை இழந்த இந்திய அணி!
இந்திய அணியின் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், மெஹிதி ஹசன் பந்து வீச்சில் மஹ்முதுல்லாஹ்விடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகியுள்ளார். அவர் 25 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்துள்ளார்.
20:22 October 19
India Vs Bangladesh : விராட் கோலி அரைசதம்!
தொடக்க வீரர் ரோஹித் சர்மாவின் விக்கெட்டுக்கு பிறகு களம் வந்த விராட் கோலி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்துள்ளார்.
20:20 October 19
India Vs Bangladesh : வெற்றிக்கு 93 ரன்கள் தேவை!
இந்திய அணி 26 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட்கள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ள நிலையில், வெற்றி பெற இன்னும் 93 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது.
20:09 October 19
India Vs Bangladesh : 23 ஓவர்கள் முடிவில் இந்தியா!
23 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 38 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் ஐயர் 9 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.
19:53 October 19
India Vs Bangladesh : கில் காலி!
தொடக்கம் முதல் சிறப்பாக ஆடி அரைசதம் விளாசிய சுப்மன் கில், 53 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்துள்ளார்.
19:48 October 19
India Vs Bangladesh : கில் அரைசதம்!
இந்திய அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில் அரைசதம் விளாசியுள்ளார்.
19:45 October 19
India Vs Bangladesh : 18 ஓவர்கள் முடிவில்!
18 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் குவித்துள்ளது. சுப்மன் கில் 49 ரன்களுடனும், விராட் கோலி 26 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.
19:19 October 19
India Vs Bangladesh : ரோஹித் அவுட்!
தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் சர்மா அரைசதம் விளாசுவார் என எதிர்ப்பார்த்த நிலையில், 48 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார்.
19:13 October 19
India Vs Bangladesh : 12 ஓவர்கள் முடிவில் இந்தியா!
12 ஓவர்கள் முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் குவித்துள்ளது. ரோஹித் சர்மா 41 ரன்களுடனும், சுப்மன் கில் 39 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றன்ர்.
18:48 October 19
India Vs Bangladesh : 5 ஓவர்கள் முடிவில்!
257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் எடுத்துள்ளது.
18:39 October 19
India Vs Bangladesh : 3 ஓவர்கள் முடிவில் இந்திய அணி!
3 ஓவர்கள் முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் சேர்த்துள்ளது.
18:32 October 19
India Vs Bangladesh : களமிறங்கியது இந்திய அணி!
257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி உள்ளது இந்திய அணி. தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் விளையாடி வருகின்றனர்.
17:51 October 19
India Vs Bangladesh : இந்திய அணிக்கு 257 ரன்கள் இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்துள்ளது.
17:39 October 19
India Vs Bangladesh : சிராஜுக்கு 2வது விக்கெட்!
போட்டியின் 47வது ஓவரை வீசிய முகமது சிராஜ், நாசூம் அகமது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
17:15 October 19
India Vs Bangladesh : 6வது விக்கெட்டை இழந்த வங்கதேசம்!
பும்ரா வீசிய 43 ஓவரில், வங்கதேச அணியின் வீரர் முஷ்பிகுர் ரஹீம் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 46 பந்துகளில் 38 ரன்களை சேர்த்திருந்தார்.
17:12 October 19
India Vs Bangladesh : 200 ரன்களை எட்டிய வங்கதேசம் அணி!
போட்டியின் 42.1 ஓவர்கள் முடிவில், வங்கதேசம் அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 200 ரன்களை சேர்த்துள்ளது.
17:01 October 19
India Vs Bangladesh : 40 ஓவர்கள் முடிவில் வங்கதேசம்!
40 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 189 ரன்களை சேர்த்துள்ளது. முஷ்பிகுர் ரஹீம் 34 ரன்களுடனும், மஹ்முதுல்லாஹ் 6 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.
16:47 October 19
India Vs Bangladesh : டவ்ஹித் ஹ்ரிடோய் அவுட்!
137 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த வங்கதேசம் அணி, அதன் பின் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்த நிலையில், தனது 5வது விக்கெட்டை இழந்துள்ளது. டவ்ஹித் ஹ்ரிடோய் 16 ரன்களுக்கு ஆட்டழந்து வெளியேறியுள்ளார்.
16:37 October 19
India Vs Bangladesh : 34 ஓவர்கள் முடிவில் வங்கதேசம்!
34 ஓவர்கள் முடிவில், வங்கதேசம் அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்துள்ளது. முஷ்பிகுர் ரஹீம் 20 ரன்களுடனும், டவ்ஹித் ஹ்ரிடோய் 12 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.
16:13 October 19
India Vs Bangladesh : 29 ஓவர்கள் முடிவில்!
29 ஓவர்கள் முடிவில், வங்கதேசம் அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 140 ரன்கள் சேர்த்துள்ளது.
16:04 October 19
India Vs Bangladesh : லிட்டன் தாஸ் காலி!
தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி வந்த லிட்டன் தாஸ் 66 ரன்கள் எடுத்த நிலையில், ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்துள்ளார்.
15:55 October 19
India Vs Bangladesh : ஆட்டமிழந்தார் மெஹிதி ஹசன்!
போட்டியின் 24.1வது ஓவரில் வங்கதேசம் அணி தனது மூன்றாவது விக்கெட்டாக மெஹிதி ஹசன் மிராஸை இழந்துள்ளது. இந்த விக்கெட்டை முகமது சிராஜ் கைப்பற்றியுள்ளார்.
15:46 October 19
India Vs Bangladesh : 22 ஓவர்கள் முடிவில்!
22 ஓவர்கள் முடிவில், வங்கதேசம் அணி 114 ரன்கள் சேர்த்துள்ளது. லிட்டன் தாஸ் 51 ரன்களுடனும், மெஹிதி ஹசன் மிராஸ் 1 ரன்னுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.
15:42 October 19
India Vs Bangladesh : லிட்டன் தாஸ் அரைசதம்!
தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வரும் லிட்டன் தாஸ், அரைசதம் விளாசியுள்ளார்.
15:38 October 19
India Vs Bangladesh : அடுத்த விக்கெட்!
போட்டியின் 20வது ஓவரை வீசிய ஜடேஜா, அந்த ஓவரின் கடைசி பந்தில் நஜ்மல் உசேன் சாந்தா விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.
15:26 October 19
India Vs Bangladesh : 100 ரன்களை கடந்த வங்கதேசம்!
போட்டியின் 18 ஓவர்கள் முடிவில், வங்கதேசம் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் சேர்த்துள்ளது.
15:18 October 19
India Vs Bangladesh : தன்சித் ஹசன் அவுட்!
தொடக்க வீரர் தன்சித் ஹசன் 51 ரன்கள் எடுத்த நிலையில், குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ஆட்டமிழந்துள்ளார்.
15:10 October 19
India Vs Bangladesh : தன்சித் ஹசன் அரைசதம்!
தொடக்க முதல் சிறப்பாக விளையாடி வந்த தன்சித் ஹசன் அரைசதம் விளாசியுள்ளார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவரது முதல் அரைசதம் ஆகும்.
14:59 October 19
India Vs Bangladesh : பவுண்டரிகள் மழையில் வங்கதேசம்!
12 ஓவர்கள் முடிவில் 72 ரன்கள் எடுத்துள்ள வங்கதேசம் அணி, இதுவரை 8 ஃபோர்கள், 3 சிக்ஸர்களை விளாசியுள்ளனர்.
14:56 October 19
India Vs Bangladesh : 10 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி!
10 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் குவித்துள்ளது. லிட்டன் தாஸ் 21 ரன்களுடனும், தன்சித் ஹசன் 40 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.
14:42 October 19
India Vs Bangladesh : காயம் காரணமாக வெளியேறினார் ஹர்திக் பாண்டியா!
9வது ஓவரை வீச வந்த ஹர்திக் பாண்டியாவுக்கு காலில் காயம் ஏற்பட்டதால், அவர் மைதானத்தில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக விராட் கோலி அந்த ஓவரை வீசினார். 9 ஓவர்கள் முடிவில், வங்கதேசம் அணி விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்துள்ளது.
14:39 October 19
India Vs Bangladesh : 8 ஓவர்கள் முடிவில்!
8 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் சேர்த்துள்ளது.
14:29 October 19
India Vs Bangladesh : 6 ஒவர்களில் 19 ரன்!
வங்கதேசம் அணி 6 ஓவர்கள் முடிவில் 19 ரன்கள் எடுத்து உள்ளது.
14:23 October 19
India Vs Bangladesh : 30 பந்துகளில் 10 ரன்!
வங்கதேசம் அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்து உள்ளது. தன்சித் ஹசன் 16 பந்துகளில் 9 ரன்னும், லிட்டன் தாஸ் 1 ரன்னும் எடுத்து உள்ளார்.
14:19 October 19
India Vs Bangladesh : பும்ரா - சிராஜ் போட்டி!
4வது ஓவரை வீசிய மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ரன் ஏதும் விட்டுக் கொடுக்காமல் மெய்டன் ஓவராக மாற்றினார்.
14:14 October 19
India Vs Bangladesh : மெயிடன் ஓவர்!
3வது ஓவரை வீசிய இந்திய வீரர் பும்ரா ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் வங்கதேசம் வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.
14:08 October 19
India Vs Bangladesh : பவுண்டரி!
2 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 5 ரன்கள் எடுத்து உள்ளது.
14:03 October 19
India Vs Bangladesh : முதல் ஓவரில் ஒரு ரன்!
வங்கதேசம் அணி முதல் ஓவரில் 1 ரன் மட்டும் குவித்து உள்ளது. முதல் ஓவரை வீசிய பும்ரா கட்டுக்கோப்பாக வீசி ஒரு ரன் மட்டும் விட்டுக் கொடுத்தார்.
13:51 October 19
India Vs Bangladesh : ஷமி, அஸ்வினுக்கு இடம் இல்லை!
புனே :வங்கதேசம் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு இந்திய அணியில் இடம் அளிக்கவில்லை.
13:46 October 19
India Vs Bangladesh : வீரர்கள் பட்டியல்!
இந்தியா : ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.
வங்கதேசம் :லிட்டன் தாஸ், தன்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மெஹிதி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, நசும் அகமது, ஹசன் மஹ்மூத், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்.
13:28 October 19
India Vs Bangladesh : டாஸ் வென்று வங்கதேசம் அணி பேட்டிங் தேர்வு!
புனே :வங்கதேசம் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளார்.