தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ரோஹித் ஷர்மா ஓய்வுக்கு என்ன காரணம்? - பிசிசிஐக்கு சஞ்சய் மஞ்ரேக்கர் கேள்வி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடருக்கு ரோஹித் ஷர்மா சேர்க்கப்படாதது குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ரேக்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

zero-clarity-on-rohit-sharmas-fitness-sanjay-manjrekar
zero-clarity-on-rohit-sharmas-fitness-sanjay-manjrekar

By

Published : Nov 13, 2020, 5:21 PM IST

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கவுள்ளது. இதற்கான இந்திய அணியில் காயம் காரணமாக ரோஹித் ஷர்மா ஓரங்கட்டப்பட்டார். பின்னர் டெஸ்ட் தொடருக்கு ரோஹித் ஷர்மா தேர்வுசெய்யப்பட்டார்.

ஒருநாள், டி20 தொடர்களில் ரோஹித் ஷர்மாவுக்கு பிசிசிஐ ஏன் ஓய்வு வழங்கியது என்று யாருக்கும் இதுவரை பதிலளிக்கவில்லை. இதனால் ரசிகர்களிடையே ரோஹித் ஷர்மா அணியிலிருந்து ஓரங்கட்டப்படுகிறார் என்ற சர்ச்சை எழுந்தது.

இதைப்பற்றி கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறுகையில், ''ரோஹித் ஷர்மா காயம் காரணமாக ஆஸி. தொடருக்குத் தேர்வுசெய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மீண்டும் டெஸ்ட் தொடருக்குச் சேர்க்கப்பட்டுள்ளார். இதனிடையே ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் களமிறங்கி சிறப்பாக ஆடியுள்ளார். அதனால் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை.

கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் போட்டிகள் நடக்கவில்லை. இதனால் கடைசி தொடரில் எந்த அணி தேர்வுசெய்யப்பட்டதோ, அதே அணி வீரர்கள் நிச்சயம் இந்திய அணிக்காகத் தேர்வுசெய்யப்பட வேண்டும்'' என்றார்.

இதையும் படிங்க:உலகக்கோப்பை 2021: இது இந்தியாவிற்கான நேரம்…

ABOUT THE AUTHOR

...view details