தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

12 நாள்களில் 6 போட்டிகள்... அனைத்திலும் ஷமி, பும்ரா ஆடுவார்களா? - நடராஜன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அனைத்து டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளர்களான ஷமி, பும்ரா ஆடுவார்களா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

with-t20is-clashing-with-red-ball-warm-up-tie-bumrah-shami-likely-to-be-rotated
with-t20is-clashing-with-red-ball-warm-up-tie-bumrah-shami-likely-to-be-rotated

By

Published : Nov 18, 2020, 9:55 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20, 4 டெஸ்ட் ஆகிய தொடர்களில் பங்கேற்கிறது. இதில் பயிற்சிப் போட்டிகளுக்கு நடுவே இரண்டு டி20 போட்டிகள் நடக்கவுள்ளது. அதனால் இந்திய அணியின் ஷமி, பும்ரா ஆகியோர் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனென்றால் டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் 12 நாள்கள் நடக்கிறது. 12 நாள்களில் 6 போட்டிகளில் பங்கேற்பது எளிய விஷயமல்ல. இதனிடையே பும்ரா, ஷமி ஆகியோரின் தேவை டெஸ்ட் போட்டிகளுக்கு அதிகமாக உள்ளது. இவர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டாலும் நிச்சயம் இந்தியாவின் பாடு திண்டாட்டம் தான். அதேபோல் இஷாந்த் ஷர்மா முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை என்றால், இவர்களை நம்பியே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு உள்ளது.

ஷமி

இதனால் பும்ரா, ஷமி இருவரும் ஒருநாள் தொடரில் பங்கேற்ற பின், டெஸ்ட் போட்டிகளில் தான் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பயிற்சியின்போதும் ஷமி பிங்க், வெள்ளை நிற பந்துகளில் பயிற்சி செய்தார். மேலும் ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவருக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஒருவர் களமிறங்கவும் வாய்ப்புகள் உள்ளது.

இதனால் டி20 தொடர்களில் தீபக் சாஹர், நடராஜன், சைனி ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:ஏடிபி ஃபைனல்ஸ்: டாமினிக் தீமிடம் வீழ்ந்த நடால்...!

ABOUT THE AUTHOR

...view details