ஐபிஎல் தொடரின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடிய இந்திய வீரர் சஹா, தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் போட்டிகளில் ஆடவில்லை. இதனால் ஆஸ்திரேலியா அணிக்காக டெஸ்ட் அணியில் சஹாவின் இடம் பொறுத்திருந்து முடிவு செய்யப்படும் என பிசிசிஐ சார்பாக அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட இந்திய அணியினரோடு சஹாவின் பயணம் செய்தார். அப்போதும் சஹாவின் காயம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதையடுத்து நவ.14ஆம் தேதியிலிருந்து இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டது. அந்தப் பயிற்சியில் அனைத்து வீரர்களும் பங்கேற்ற நிலையில், சஹா பற்றிய எவ்வித தெளிவும் இல்லாமல் இருந்தது.