ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 105 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 7 ஆயிரத்து 696 ரன்களை சேர்த்துள்ளார்.
இவர் 1994ஆம் ஆண்டின்போது இலங்கை மற்றும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் மிதவேகப் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிரமப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்னையை சரிசெய்வதற்காக ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ''டியர் சர் டான், இந்தக் கடிதம் எழுதுவதற்கு எனக்கு கூச்சமாக உள்ளது. ஆனால் உங்களின் சிறிய ஆலோசனையும் டெஸ்ட் கிரிக்கெட்டராக எனது குறிக்கோளை அடைவதற்கு பெரும் உந்துசக்தியாக இருக்கும்.
நான் பேக் ஃபூட்டில் ஆடுபவன். மிதவேகப் பந்துவீச்சாளர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று உங்களிடம் ஏதும் ஆலோசனை இருந்தால் கூறவும்'' என எழுதப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்திற்கு பதிலளித்த டான் பிராட்மேன், '' உங்களின் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கு எஎன்னைப் போன்ற ஒரு பழைய தலைமுறையைச் சேர்ந்த மூத்த வீரர் ஒருவர் உதவ முடியும் என்று கேட்பதன் மூலம் என்னை புகழ்ந்துள்ளீர்கள்.
மிதவேகப் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பிரச்னை என்று கூறியிருக்கிறீர்கள். அவர்களை எதிர்கொள்வதற்காக, நான் எப்போதும் பந்துவீசும் மும் சற்று முன் செல்வேன். சில நேரங்களில் விலகியும், அருகிலும், பின்னும் நகர்வேன்.
நானும் பேக் ஃபூட் வீரர் தான். அதன்மூலம் கிரிக்கெட் வீரர்களுக்கு பல வகையான ஷாட்களை அடிக்க முடியும். எனக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும் என்பதால், நான் எப்போதும் வேடிக்கையாக தான் ஆடுவேன்'' என பதிலளித்துள்ளார்.
இந்தக் கடிதம் பற்றி பேசிய லாங்கர், எனது படிப்பறையில் டான் பிராட்மேனின் கடிதம் மிகப்பெரிய பொக்கிஷம் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க:கறுப்பின நடுவர்கள் இல்லாதது பற்றி விசாரணை நடத்துக: ஈசிபி மீது எழுந்துள்ள இனவெறி குற்றச்சாட்டு!