சென்ற முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அணி வரலாற்று வெற்றிப்பெற்று தொடரை வென்று சாதனை படைத்தது. இதனால் இம்முறை இந்திய அணியின் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் இம்முறை ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதனால் ஆஸ்திரெலிய அணி இந்திய அணிக்கு சரிசமமாக அமைந்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், ''முதல் ஒருநாள் தொடர் நடக்கும் அன்றைய தினமே ஆஸ்திரேலிய அணியை சந்திப்பேன் என நினைக்கிறேன். அதனால் தயாராவதற்கு நேரம் இல்லை. ஆனால் ஐபிஎல் தொடரிலிருந்து சில பயிற்சியாளர்கள் வருகிறார்கள். மெக்டொனால்டு உள்ளிட்ட பயிற்சியாளர்கள் ஆஸி. வீரர்கள் தயார் செய்வார்கள். இந்த முறை நிச்சயம் இந்திய அணியை ஆஸ்திரேலியாவால் வீழ்த்த முடியும்'' என்றார்.