தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்திய அணியின் வலைப்பயிற்சியில் பந்துவீசும் தமிழ்நாடு வீரர் நடராஜன்! - வலைப் பயிற்சியில் பந்துவீசும் நடராஜன்

இந்திய அணியில் நடராஜன் இடம்பிடித்துள்ள நிலையில், அவர் வலைப் பயிற்சியில் பந்துவீசும் வீடியோக்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

watch-natarajan-hits-nets-for-first-time-after-india-call-up
watch-natarajan-hits-nets-for-first-time-after-india-call-up

By

Published : Nov 15, 2020, 9:33 PM IST

ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக பந்துவீசிய தமிழ்நாடு வீரர் நடராஜன் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தார். இவரது யார்க்கர்ளை பார்த்து பிரெட் லீ, யுவராஜ் சிங், இர்ஃபான் பதான் என பல்வேறு முன்னாள் ஜாம்பவான் வீரர்களும் பாராட்டினர்.

இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்த வருண் சக்கரவர்த்திக்கு காயமடைந்த நிலையில், அவருக்கு பதிலாக நடராஜன் தேர்வு செய்யப்பட்டார்.

ஐபிஎல் தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்திய அணியுடன் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட நடராஜன், ப்ளூ ஜெர்சியில் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் சமூகவலைதளங்களில் ஹிட்டடித்தன. இந்நிலையில் இந்திய அணியின் வலைப் பயிற்சியில் நடராஜன் பந்துவீசும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவுடன், ஐபிஎல் தொடரில் பந்துவீசி இவர் பெற்ற வெற்றிகளைப் பார்த்தோம். ஆனால் இப்போது முதல்முறையாக இந்திய அணியின் வலைப்பயிற்சியில் நடராஜன் பந்துவீசுகிறார். நிச்சயம் இது கனவு நனவான நிமிடம் தான்'' என தெரிவித்துள்ளது.

நீண்ட வருடங்களாக இடதுகை பந்துவீச்சாளர்கள் சரிவர கிடைக்காத இந்திய அணிக்கு, நிச்சயம் நடராஜன் அதன் தீர்வாக இருப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இதையும் படிங்க:ஏழாவது முறையாக சாம்பியனான லீவிஸ் ஹேமில்டன்!

ABOUT THE AUTHOR

...view details