ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு, கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகளில், எந்த வீரருக்கும் கரோனா இல்லை என்று உறுதியான நிலையில், வீரர்கள் அனைவரும் பயிற்சிக்கு திரும்பியுள்ளனர்.
சுழற்பந்துவீச்சாளர்கள் அஸ்வின், சாஹல், குல்தீப் யாதவ், வேகப்பந்துவீச்சாளர் உமேஷ், நடராஜன், பேட்ஸ்மேன்கள் புஜாரா, ஹர்திக் ஆகியோர் சிட்னி ஒலிம்பிக் பார்க் மைதானத்தில் பயிற்சி செய்யும் புகைப்படங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.