தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தந்தையின் உடல்நிலையால்தான் ரோஹித் ஆஸி. செல்லவில்லை: பிசிசிஐ - virat kohli

ஐபிஎல் தொடரின் போது ரோஹித் ஷர்மாவின் தந்தைக்கு ஏற்பட்ட மோசமாக உடல்நிலை காரணமாக தான் அவர் நேரடியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்லவில்லை என பிசிசிஐ சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

rohit-didnt-travel-to-australia-because-of-fathers-illness-bcci
rohit-didnt-travel-to-australia-because-of-fathers-illness-bcci

By

Published : Nov 27, 2020, 8:40 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 போட்டிகளில் ரோஹித் ஷர்மா தேர்வு செய்யப்படாதது சர்ச்சையானது. இதனைத்தொடர்ந்து அவர் என்சிஏ-வுக்கு சென்று காயத்திற்கு சிகிச்சை எடுத்து வருகிறார்.

இதனிடையே ரோஹித் ஷர்மாவின் காயம் குறித்து எங்களுக்கு சரியான தெளிவில்லை என்று சில நாள்களுக்கு முன்பாக கேப்டன் கோலி கூறியிருந்தார். இதுகுறித்து பிசிசிஐ சார்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதில், தனது தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரைப் பார்க்க ரோஹித் ஷர்மா மீண்டும் மும்பை திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது ரோஹித்தின் தந்தை உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரோஹித் ஷர்மாவால் தேசிய கிரிக்கெட் அகாடமிக்குப் பயணப்பட்டு, தன் காயத்துக்கான சிகிச்சையை தொடங்கியுள்ளார். அவருக்கு மீண்டும் டிசம்பர் 11ஆம் தேதி உடற் தகுதி சோதனை செய்யப்படும். இதன் பிறகு அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் பங்கேற்பது குறித்த தெளிவு கிடைக்கும். ஆனால் விராட் கோலி சொன்னது போல இந்த விஷயத்தில் நிலவிய குழப்பத்தை நாங்கள் புரிந்து கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் ஷர்மா பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. டிச.11ஆம் தேதி ரோஹித்தின் சோதனை முடிவுகள் பொறுத்தே கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக தெளிவு கிடைக்கும் என தெரிகிறது.

இதையும் படிங்க:அதானி நிறுவனத்திற்கு எதிராக சிட்னி மைதானத்தில் களமிறங்கிய போராட்டக்காரர்கள்...!

ABOUT THE AUTHOR

...view details