தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கோலி ஆடும் முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகளின் தேவை அதிகரிப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி ஆடும் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகளின் தேவை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rise-in-ticket-demand-for-kohlis-lone-test-in-adelaide
rise-in-ticket-demand-for-kohlis-lone-test-in-adelaide

By

Published : Nov 13, 2020, 7:56 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே கேப்டன் விராட் கோலி விளையாடவுள்ளார்.

மீதமுள்ள மூன்று போட்டிகளிலிருந்து விலகியுள்ள கோலி, மனைவி அனுஷ்கா ஷர்மா பிரசவத்திற்காக நாடு திரும்பவுள்ளார். இதனால் விராட் கோலி ஆடும் முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகளின் தேவை அதிகரித்துள்ளது.

மெல்போர்னில் காஃபி ஷாப் வைத்து நடத்திவருபவர் அன்கத் சிங் ஓபராய். இவர் ஸ்வாமி ஆர்மி ஆதரவாளர்கள் குழு என்ற இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அமைப்பை நடத்திவருகிறார். இந்திய அணி ஆடும் ஒவ்வொரு போட்டிக்கும், வாக்கெடுப்பு பெட்டி முறை மூலம் டிக்கெட்டுகள் வழங்கும் இவர், கோலி ஆடும் முதல் டெஸ்ட் போட்டியைக் காண்பதற்கான கோரிக்கைகள் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.

இதைப்பற்றி அவர் பேசுகையில், ''கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் தொடர்ந்து பேசிவருகிறோம். இந்தியா - ஆஸ்திரேலியா தொடரை நேரடியாக கண்டுகளிக்க 25 ஆயிரம் பேர் வரை அதிகரிக்கப்படும்" என்றார்.

இந்தத் தொடருக்கான எதிர்பார்ப்பு எப்படி உள்ளது என்பதைக் காண்பதற்காக முதலில் ஒரு வாக்குப்பெட்டி வைத்திருந்தோம். அதில் 200 முதல் 300 பேர் வரை விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் பதிவிட்டுவருகின்றனர். இப்போது இங்கே சூழல் மாறியுள்ளது'' என்றார்.

விராட் கோலி ஆடும் முதல் டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'264 ரன்கள்' ஒரு அணியின் ஸ்கோர் அல்ல; ஒரு வீரரின் ஸ்கோர்: ஹிட்மேன் உருவான நாள் இன்று!

ABOUT THE AUTHOR

...view details