ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தை இந்திய தொழிலதிபரான அதானியின் நிறுவனம் சார்பாக வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் பல்வேறு தரப்பினரும் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதானியின் நிறுவனத்திற்கு ஆஸி. அரசு அனுமதி வழங்கியிருந்தாலும், அதனால் சுற்றுச்சூழலுக்கு பெரும் கெடு விளையும் என்று போராட்டக்காரகள் கூறுகின்றனர். இதனிடையே அதானி நிறுவனத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி சார்பாக 1 பில்லியன் டாலர் கடனாக வழங்கப்படவுள்ளது. இதற்கு ஸ்டாப் அதானி என்னும் போராட்டக் குழுவினர் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.