இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நவ.27ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர பயிற்சி செய்துவருகின்றனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், துணை பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலிய அணியின் வலைப்பயிற்சியில் கலந்துகொண்டுள்ளார்.
ரிக்கி பாண்டிங்கின் வருகை குறித்து ஆஸி. வீரர் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் கூறுகையில், ''ரிக்கி பாண்டிங் மீண்டும் திரும்பிவிட்டார். தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் எப்போதும் நேரத்தை வீணடிக்க விரும்பாதவர். பயிற்சிக்கான நேரம் தொடங்குகிறது என்றால், தொடக்கம் முதல் இறுதி வரை ஒவ்வொரு வீரருக்கும் பந்தை வீசுவார். சோர்வடைந்த பின், சில மணி நேரங்கள் செலவிட்டு படுக்கைக்குத் திரும்புபவர்.
வேலை வாங்குவதில் வீரராக மட்டுமல்ல பயிற்சியாளராகவும் சிறந்தவர் பாண்டிங். அவர் பற்றிய கதைகள் அதிகமாக கேட்டிருக்கிறோம். ஆனால் ஒரு மனிதராக அவரை அணுகும்போது, ஒரு வீரராக அவர் எவ்வளவு சிறந்தவர் என்பது தெரியும். அவருடைய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் நம் மனத்திற்குள் கொண்டு வந்துவிடுவார்.
எனக்கு ஒரு வழிகாட்டியாக பாண்டிங் உள்ளார். சில ஆண்டுகளாக தான் எனக்கு அவரைத் தெரியும். அவர் என்ன வேண்டும் என்று சொல்லமாட்டார். மாறாக இதுதான் எனக்கு வேண்டும் என்று செய்துகாட்டுவார்.
அவருக்கு நமது ஆட்டத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், நிச்சயம் சொல்லிவிடுவார். அவர் எப்போதும் ஒரு மனிதரை மாற்றுவதில் ஈடுபட மாட்டார். ஒரு பயிற்சியாளராக நமது ஆட்டத்தில் என்ன பிரச்னை உள்ளது என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்ப மாற்றுவார்'' என்றார்.
இதையும் படிங்க:பெங்கால் டி20 சேலஞ்ச்: மூன்று வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி!