தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கோலியால் போட்டிபோடும் ஆஸ்திரேலியாவின் இரு தொலைக்காட்சிகள்! - இந்தியா - ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலிருந்து விராட் கோலி பாதியோடு நாடு திரும்புவதால், ஆஸ்திரேலியாவின் இரண்டு தொலைக்காட்சிகளுக்கு இடையே பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.

kohlis-absence-in-india-aus-tour-drags-2-media-houses-on-war-pkohlis-absence-in-india-aus-tour-drags-2-media-houses-on-war-pathath
kohlis-absence-in-india-aus-tour-drags-2-media-houses-on-war-path

By

Published : Nov 12, 2020, 4:28 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியோடு இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி நாடு திரும்புவதால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒளிபரப்பாளர்களான சேனல் 7 தொலைக்காட்சியைக் காட்டிலும் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அதிகமாக சாதகம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒளிபரப்பும் உரிமையை ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியும், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை சேனல் 7 தொலைக்காட்சியும் கைப்பற்றியுள்ளது. இதில் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனல் பணம் செலுத்தி பார்க்கக் கூடிய தொலைக்காட்சியாகும்.

இதனிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியோடு இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி நாடு திரும்பவுள்ளார். இதனால் விராட் கோலி விளையாடும் 14 நாள்கள் கிரிக்கெட்டை ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியால் ஒளிபரப்ப முடியும். ஆனால் சேனல் 7 தொலைக்காட்சியால் கோலியின் 5 நாள்கள் ஆட்டத்தை மட்டுமே ஒளிபரப்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதைப்பற்றி ஆஸ்திரேலியா நாளிதழ்கள் கூறுகையில், '' மெஸ்ஸி, ரொனால்டோ, லெப்ரான் ஜேம்ஸ் ஆகியோரையடுத்து விராட் கோலிக்கு தான் அதிக அளவில் சமூக வலைதளங்களில் தடம்பதித்த வீரர். இதனால் கோலி விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்தையும் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் ப்ரீமியமாக மாற்றியுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.

இந்த இரு சேனல்களின் கோடை கால உத்வேக நடவடிக்கைகள் அனைத்தும் கோலியை சார்ந்தே இருந்தது. ஆனால் கோலி தொடரிலிருந்து பாதியோடு விலகுவதால், சேனஸ் 7 தொலைக்காட்சியின் விளம்பர வருவாய் பாதியாக குறைந்துள்ளது. இதனால் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் வருவாய் அதிகரித்துள்ளது.

இதனிடையே சேனல் 7 தொலைக்காட்சிக்கும், கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகத்திற்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளதால், சேனல் 7 தொலைக்காட்சி 450 மில்லியன் டாலர் ஒப்பந்தத்திலிருந்து விலகப்போவதாக கூறியுள்ளது.

இந்தப் பிரச்னை ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான தொடர் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டதால் எழுந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. புதிய அட்டவணையில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்கள் முன்னுக்கும், டெஸ்ட் கிரிக்கெட் தொடர் பின்னுக்கு தள்ளப்பட்டது. இதனால் ஆஸ்திரேலியா மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலம் முடிவடைந்து, வேலைக்கு திரும்பிவிடுவர். அந்த நேரத்தில் டெஸ்ட் தொடரை ஒளிபரப்புவதால் வருவாய் குறையும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:1992 உலகக் கோப்பை ஜெர்சியில் களமிறங்கும் இந்திய அணி

ABOUT THE AUTHOR

...view details