இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் நவ.27ஆம் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி தொடர் குறித்தும், விராட் கோலி பற்றியும் ஆடம் ஸம்பா மனம் திறந்துள்ளார்.
அதில், ''ஐபிஎல் தொடருக்காக அமீரகம் சென்றபோது, நான் எனது ஓய்வறையில் இருந்தேன். அப்போது திடீரென எனது அலைபேசிக்கு ஒரு நம்பரில் இருந்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்தது. எனக்கு யாருடைய நம்பர் என்று தெரியவில்லை. பின்னர் தான் தெரிந்தது அது விராட் கோலியின் நம்பர் என்று.
பின்னர் ஒரு உணவகம் சென்றேன். அங்கு அவர் இருந்தார். எனக்கு அவரை பெரிதாக தெரியாது. ஆனால் நாங்கள் பல நாள்களாக நண்பர்களாக இருந்தது போல பேசினோம்.
நிச்சயம் அவர் கிரிக்கெட் களத்தில் பார்ப்பவர் மட்டும் இல்லை. அவர் எப்போதும் கிரிக்கெட் களத்திலும், பயிற்சியிலும் ஒரு எனர்ஜியை உருவாக்குகிறார். அவர் எப்போதும் போட்டியை விரும்புபவர். அதேபோல் தோல்வியடைவதை வெறுப்பவர். அதனால் தான் அவரது அக்ரஸிவ்னெஸ் வெளியில் அதிகமாக தெரிகிறது.