தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

களத்தில் இறங்கிவிட்டால் விராட் கோலி ஒரு 'பீஸ்ட்' - கோலி பற்றி ஸாம்பா

துபாய்: கிரிக்கெட் களத்தில் இறங்கிவிட்டால் விராட் கோலி ஒரு பீஸ்ட் என ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா தெரிவித்துள்ளார்.

kohli-a-competitive-beast-on-the-field-chilled-out-off-it-zampa
kohli-a-competitive-beast-on-the-field-chilled-out-off-it-zampa

By

Published : Nov 12, 2020, 7:17 PM IST

ஆஸ்திரேலியா அணியின் இடது கை பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணிக்காக ஆடினார். இவர் கேப்டன் விராட் கோலி பற்றி பேசுகையில், ''கிரிக்கெட் களத்தில் விராட் கோலி ஒரு பீஸ்ட். ஆனால் ஆடுகளத்தைவிட்டு வெளியே பேசும்போது வேறு மனிதராக உள்ளார். எப்போதும் அவருக்கு எதிராகவே கிரிக்கெட் ஆடியதால், அவரைப் பற்றி ஒரு பிம்பம் இருந்தது.

ஆனால் ஐபிஎல் தொடரில் அவருக்கு கீழ் ஆடியபோது அவருடன் அதிக அளவில் நேரம் செலவழிக்க முடிந்தது. அப்போதுதான் விராட் கோலியின் இன்னொரு பக்கம் தெரிந்தது.

களத்தில் அவர் எப்போதும் ஆக்ரோஷமாகவே இருப்பார். அவருடன் ஆடிய முதல் போட்டியிலேயே இது தெரிந்துவிட்டது. அவரை சிரிக்க வைப்பது மிகவும் எளிதான காரியம். உலகின் மோசமான ஜோக்கை கூறினாலும் அவர் வாய்விட்டு சிரித்துவிடுவார்'' என்றார்.

ஐபிஎல் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நவ.27ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடருக்காக இந்திய அணியுடன், ஐபிஎல் தொடரில் ஆடிய ஆஸ்திரேலிய வீரர்களும் இன்று ஆஸ்திரேலியாவில் தரையிறங்கினர்.

இதையும் படிங்க:சிட்னியில் தரையிறங்கிய இந்திய அணி!

ABOUT THE AUTHOR

...view details