ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் இன்றைய போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பிடித்துள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய இவர், 16 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். யாக்கர் பந்து வீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்க வைக்கும் வகையில் அவர் சிறப்பாக பந்து வீசினார்.