தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கோலி இல்லாததால் நிச்சயம் கோப்பை ஆஸி.க்குத்தான் - வாஹன் - பார்டர் - கவாஸ்கர் கோப்பை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் கோலி ஆடாததால், பார்டர் - கவாஸ்கர் கோப்பையை நிச்சயம் ஆஸ்திரேலிய அணி வெல்லும் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாஹன் தெரிவித்துள்ளார்.

in-kohlis-absence-aus-will-easily-win-test-series-against-india-vaughan
in-kohlis-absence-aus-will-easily-win-test-series-against-india-vaughan

By

Published : Nov 12, 2020, 5:32 PM IST

ஐபிஎல் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் கண்களும் இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் மீது குவிந்துள்ளது. அதிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி ஆடவில்லை என்பதால், முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள் அனைவரும் கோப்பை ஆஸ்திரேலியாவுக்குத்தான் என இப்போதே ஆருடம் கூற ஆரம்பித்துவிட்டனர்.

இதைப்பற்றி ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ''ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் கோலி இல்லை. நிச்சயம் மனைவியின் பிரசவத்திற்கு கணவர் உடனிருக்க வேண்டும்.

கோலி சரியான முடிவைத்தான் எடுத்துள்ளார். கோலி இல்லை என்பதால் ஆஸ்திரேலிய அணி எளிதாக விக்கெட்டை வீழ்த்தும்'' என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details