தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி! - கப்பா மைதானம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Brisbane
Brisbane

By

Published : Jan 19, 2021, 4:48 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் கப்பா மைதானத்தில் தோல்வி அடைந்தது இல்லை என்ற ஆஸ்திரேலியாவின் 33 ஆண்டு கால சாதனையை இந்திய அணி தகர்த்துள்ளது.

இந்த வரலாற்று வெற்றியின் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 117.65 புள்ளிகளுடன் இந்தியா அணி மூன்றாவது இடத்தில் இருந்து ஒரு இடம் முன்னேறி இரண்டாவது இடம் பிடித்துள்ளது. 118.44 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நியூசிலாந்து அணி உள்ளது. படுதோல்வி அடைந்த ஆஸ்திரேலியா அணி 113 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஐசிசி வெளியிட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்

வெற்றி அடைந்த இந்திய அணிக்கு முன்னாள் இந்திய அணி வீரர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:பார்டர் கவாஸ்கர் கோப்பை: ஆஸி.க்கு எதிராக கபாவில் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்த இந்தியா

ABOUT THE AUTHOR

...view details