இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. அதில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஐபிஎல் தொடரில் ஃபார்மின்றி தவித்த மேக்ஸ்வெல், நேற்றையப் போட்டியில் 19 பந்துகளுக்கு 45 ரன்கள் எடுத்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். மேக்ஸ்வெல் பேட்டிங் ஆடும்போது கே.எல். ராகுல்தான் விக்கெட் கீப்பிங் செய்தார்.
இந்த வீரர்கள் இருவரும் கிங்ஸ் லெவன் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஒன்றாக ஆடினர். கே.எல். ராகுல் மேக்ஸ்வெல்லை நம்பி, 13 போட்டிகளில் களமிறக்கினார். ஆனால் ஒரு போட்டியில்கூட மேக்ஸ்வெல் நன்றாக ஆடவில்லை. ஆனால் ஆஸ்திரேலியா அணிக்காக களமிறங்கிய முதல் போட்டியிலேயே மேக்ஸி அசத்தினார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜேம்ஸ் நீஷம், நியூசிலாந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இவருக்கு ஐபிஎல் தொடர் சரியாக அமையவில்லை.
இதனால் கே.எல். ராகுல் - மேக்ஸ்வெல் - நீஷம் ஆகியோரை வைத்து மீம் கிரியேட்டர்கள் சமூக வலைதளங்களில் பல மீம்களைப் பதிவிட்டுவந்தனர். அதில் நியூசிலாந்து அணி ஜேம்ஸ் நீஷமும் ஈடுபட, அந்த மீமிற்கு கீழ் வந்து மேக்ஸ்வெல், 'நான் பேட்டிங் செய்யும்போதே ராகுலிடம் மன்னிப்புக் கேட்டேன்' எனப் பதிவிட்டார். இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் இன்னும் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க:'கார்ல்ஸ் குவாட்ராட் பயிற்சியின்கீழ் எனது ஆட்டம் முன்னேறியுள்ளது' - ராகுல் பெக்கே