தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்தியத் தொடருக்கு தயாராவதற்கு ஒருநாள் போதும்: ஹெசல்வுட் - இந்தியா vs ஆஸ்திரேலியா

இந்திய அணிக்கு எதிரான ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராவதற்கு ஒருநாள் போதும் என ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் ஹெசல்வுட் தெரிவித்துள்ளார்.

hazlewood-eyeing-one-big-day-of-red-ball-bowling-to-prepare-for-india-series
hazlewood-eyeing-one-big-day-of-red-ball-bowling-to-prepare-for-india-series

By

Published : Nov 4, 2020, 10:15 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு நவம்பர் மாத இறுதியில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. நவ. 27ஆம் தேதி தொடங்கவுள்ள டி20 தொடருக்குப் பின், ஒருநாள் தொடரிலும், டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கவுள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய வீரர் ஹெசல்வுட் கூறுகையில், ''டி20, ஒருநாள், டெஸ்ட் என எந்த வகை போட்டியாக இருந்தாலும், அது கிரிக்கெட்தான். அனைத்து வகையிலும் நிச்சயம் தீவிரமாக ஆடுகிறோம். அனைத்துவிதமான போட்டிகளுக்கும் பெரிய அளவிலேயே தயாராகிறோம். என்னைப் பொறுத்தவரை பயிற்சியின்போது 18 முதல் 20 ஓவர்கள் வரை வீச முடியும். அதேபோல் ஒரு நாள் முழுக்க ஃபீல்ட் செய்தால், நான் தயாராகிவிட்டேன் என்று உணர்வேன்.

ஒரு வாரத்தில் மூன்று ஒருநாள் போட்டி என்பது சிறந்தத் திட்டம். ஏனென்றால் சர்வதேச அளவில் 30 ஓவர்கள் வீசுவது நல்ல தொடக்கம். அதனால் இது டெஸ்ட் போட்டி போன்ற அனுபவம்தான். ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில் எப்போதும் விக்கெட்டுகளுக்காக மட்டுமே வீசுவோம். அதிக அளவிலான மாற்றங்கள் செய்வோம். ஆனால் டெஸ்ட் போட்டி என்பது அப்படியல்ல.

என் கைகளுக்கு சிவப்பு பந்துகள் கொடுத்தால், ப்ரஷர் ஏற்றுவதுதான் முக்கியப் பணியாக இருக்கும். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் பொறுமையாக இருந்தால் மட்டுமே விக்கெட்டுகள் கிடைக்கும்'' என்றார்.

ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்றுள்ளதால், அந்நாட்டு தொடரான ஷெஃபீல்டு ஷீல்டு தொடரில் வார்னர், ஹெசல்வுட், கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அங்கீகாரம் கிடைக்காத வீரர் சந்தீப் ஷர்மா: பிராட் ஹாக் ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details