தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆஸ்திரேலியா - இந்தியா ஒருநாள் தொடர் : புள்ளிவிவரங்கள் மூலம் ஒரு பயணம்! - ஆஸ்திரேலியா - இந்தியா ஒருநாள் தொடர்

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையில் 140 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ள நிலையில், சில புள்ளிவிவரங்கள் குறித்து அறிந்து கொள்வோம்.

australia-vs-india-odis-journey-through-the-stats
australia-vs-india-odis-journey-through-the-stats

By

Published : Nov 17, 2020, 5:26 PM IST

Updated : Nov 17, 2020, 5:38 PM IST

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையில் இதுவரை 140 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. அதில் ஆஸ்திரேலிய அணி 78 போட்டிகளிலும், இந்திய அணி 52 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. 10 போட்டிகளில் முடிவுகள் எட்டப்படவில்லை.

இரு அணிகளும் 300+ ரன்களை 44 முறை (ஆஸ்திரேலிய அணி 26 முறை, இந்திய அணி 18 முறை) அடித்துள்ளன. அதில் 300+ ரன்களை சேர்த்தப்பின் ஆஸ்திரேலியா அணி மூன்று முறை ஆல் அவுட் ஆகியுள்ளது. அதேபோல் இந்திய அணியும் மூன்று முறை ஆல் அவுட் ஆகியுள்ளது.

2013ஆம் ஆண்டு பெங்களூருவில் இந்திய அணியால் சேர்க்கப்பட்ட 383 ரன்களே இரு அணிகளுக்கு இடையிலான தொடரில் சேர்க்கப்பட்ட அதிக ரன்கள். அதேபோல் ஆஸி.க்கு எதிரான இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோரும் இதுதான். இந்திய அணிக்கு எதிராக 2019ஆம் ஆண்டில் மொஹாலி மைதானத்தில் அடிக்கப்பட்ட 359 ரன்கள் தான் ஆஸி. அடித்த அதிகபட்ச ஸ்கோர்.

150 ரன்களுக்குக் குறைவாக இந்திய அணி ஐந்து முறையும், ஆஸ்திரேலியா அணி ஐந்து முறையும் ஆல் அவுட் ஆகியுள்ளன.

1981ஆம் ஆண்டு ஆஸி,க்கு எதிராக சிட்னியில் இந்திய அணி 63 ரன்களுக்கு ஆல் அவுட் செய்யப்பட்டதே இந்திய அணியின் குறைந்தபட்ச ஸ்கோராகும். 1991ஆம் ஆண்டு ஆஸி. அணி பெர்த் மைதானத்தில் இந்திய அணியிடம் 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதே ஆஸி.யின் குறைந்தபட்ச ஸ்கோராகும்.

100+ ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை ஒன்பது முறை வீழ்த்தியுள்ளது. இதேபோல் இந்திய அணி ஆஸ்திரேலியாவை மூன்று முறை வீழ்த்தியுள்ளது.

2004ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒருநாள் போட்டியில் ஆஸி. அணி இந்தியாவை 208 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியாவுக்கு எதிராக ஆஸி. அணி வென்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். 2001 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி ஆஸி.யை 118 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே, இந்தியாவின் பெரும் வெற்றி.

இந்த ஆண்டு, ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இரு அணிகளுக்கு இடையிலான போட்டிகளில், இந்த ஒரு போட்டியில் மட்டுமே, ஆஸி. இதுபோன்று வெற்றிபெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐந்து முறையும், இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ளன.

இதையும் படிங்க:லாரா, கெய்ல் கொடுத்த கிஃப்ட்... ரகசியம் வெளியிட்ட சச்சின்...!

Last Updated : Nov 17, 2020, 5:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details