ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதற்காக 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய தேர்வுக் குழுத் தலைவர் ட்ரிவர் ஹான்ஸ் கூறுகையில்,
'' மார்ஷ் ஷெஃபீல்டு ஷீல்டு டிராபியில் ஏராளமான இளம் வீரர்கள் சிறப்பாக ஆடியுள்ளனர். அதிலிருந்து கேமரூம் க்ரீன், வில் புகோவ்ஸ்கி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தவிர்க்க முடியாத அளவிற்கு ஆடியுள்ளதால் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் இதுபோன்ற இளம் வீரர்களின் வருகையால் இன்னும் அதிக புத்துணர்வு ஏற்பட்டுள்ளது.
அதேபோல், ஒருநாள் மற்றும் டி20 அணியில் ஆஸ்திரேலியா அணியின் அனுபவ வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியாவின் அனுபவ வீரர்களில் முக்கியமானவர் ட்ராவிஸ் ஹெட். டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் டிம் பெய்னுக்கு மிகவும் உதவிக்கரமாகவும், நல்ல தலைவராகவும் செயல்படுகிறார்.