ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இந்திய வீரர்கள் அனைவரும் ஆஸ்திரேலிய தொடருக்குத் தயாராகிவருகின்றனர். அதேபோல் காயம் ஏற்பட்டுள்ள வீரர்கள் பலரும் தீபாவளி பண்டிகை முடிவடைந்த பின், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதமிக்குத் திரும்பவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக ரோஹித் ஷர்மா நாடு திரும்பிய பின்னர், தீபாவளியை குடும்பத்தினருடன் கொண்டாடிவிட்டு தேசிய கிரிக்கெட் அகாதமிக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.