சிட்னியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்துகொண்டிருந்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால், அவர் மூன்றாவது ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரிலும் பங்கேற்கவில்லை.
வார்னர் இல்லாதது டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவாகவே அமைந்தது. தற்போது காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் இவர் பங்கேற்க மாட்டார் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 17ஆம் இந்த போட்டி தொடங்குகிறது.