ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கிறது. இதற்காக ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடனேயே நவ.12ஆம் தேதி இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது.
இதையடுத்து இந்திய அணியினர் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் புகைப்படங்கள், வீடியோக்கள் பிசிசிஐ வெளியிட்டது.
அந்தப் பயிற்சிகளில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பங்குபெறாமல் இருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்றும் பயிற்சியில் ரவி சாஸ்திரி பங்கு பெற்றுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், '' நீண்ட நாள்களுக்கு பின் களத்திற்கு திரும்பியது மகிழ்ச்சி'' என பதிவிட்டு, ஹர்திக், தவான், ஷர்துல் தாகூர் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:விலகிய கேன் ரிச்சர்ட்சன்... தேர்வு செய்யப்பட்ட ஆன்ட்ரூ டை!