மெல்போர்ன்: ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 195 ரன்களில் சுருண்டது.
இது குறித்து விவிஎஸ் லட்சுமணண் தனது ட்வீட்டில், “இந்தியாவுக்கு இது சிறப்பான நாள். பந்து வீச்சாளர்களுக்கு பாராட்டுகள்.
அறிமுக வீரர்கள் இருவரும் நம்பிக்கையுடன் இருந்தார்கள். ரஹானே அணியின் தலைவராக சிறப்பாக செயல்பட்டார். மிக முக்கியமாக அடிலெய்டு டெஸ்ட்டில் செய்த தவறுகள் நடைபெறவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 56 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவருக்கு பக்கபலமாக ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை எடுத்தார்.
அறிமுக வீரர் முகமது சிராஜ் 15 ஓவர்கள் வீசி, 40 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மீதமிருந்த ஒரு விக்கெட்டை ரவீந்திர ஜடேஜா வீழ்த்தினார்.
முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 36 ரன்னுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. இரண்டாவது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடங்குகிறது.
இதையும் படிங்க: 'கோலியைப் போல் ஆக்ரோஷமானவர் ரஹானே' - பாராட்டிய கிரிக்கெட் ஜாம்பவான்!