தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்தியாவுக்கு ஏதிரான டி20 தொடர்: அயர்லாந்து அணி அறிவிப்பு! - cricket update

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ள நிலையில், அந்த தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

அயர்லாந்து
ireland t20 squad

By

Published : Aug 5, 2023, 3:39 PM IST

ஹைதராபாத்: இந்தியா கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற்ற நிலையில் அதில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

தொடர்ந்து தற்போது 5 போட்டிகள் டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதலில் நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரை முடித்த கையோடு இந்திய அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டம் ஆகஸ்ட் 18ஆம் தேதியும், இரண்டாவது ஆட்டம் 20ஆம் தேதியும், மூன்றாவது ஆட்டம் 23ஆம் தேதியும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வேகபந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பி உள்ளார். காயம் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு எடுத்துக் கொண்ட நிலையில் தற்போது மீண்டும் களம் காண உள்ளார். இவர் தலைமையில் இந்திய அணி அயர்லாந்தை ஏதிகொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக ரூத்ராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த போட்டிகளில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முன்னனி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக விளையாட உள்ள அயர்லாந்து அணியின் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொடரை அயர்லாந்து அணி பால் ஸ்டிர்லிங் தலைமையில் சந்திக்க உள்ளது.

அயர்லாந்து அணி விவரம்:

பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி, மார்க் அடேர், ராஸ் அடேர், கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டாக்ரெல், ஃபியோன் ஹேண்ட், ஜோஷ் லிட்டில், பேரி மெக்கார்த்தி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், தியோ வான் வொர்காம், பென் ஒயிட், கிரேக் யங்.

இதையும் படிங்க:Asian Champions Trophy: மலேசியாவை வீழ்த்திய சீனா.. டிராவில் முடிந்த இந்தியா - ஜப்பான் ஆட்டம்

ABOUT THE AUTHOR

...view details