தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IND vs SL: இந்தியா-இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை - india sri lanka t20i match

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி இன்று முதல் டி 20 போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது

india-sri-lanka-t20i-series-first-t20i-match
india-sri-lanka-t20i-series-first-t20i-match

By

Published : Feb 24, 2022, 3:07 PM IST

லக்னோ:இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. அந்த வகையில் இன்று(பிப்.24) இரவு 7 மணிக்கு லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் டி-20 தொடரின் முதல் ஆட்டம் தொடங்குகிறது.

இந்த போட்டிகளுக்கு முழுநேர கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி-20 தொடரை முழுமையாக கைப்பற்றியது. அதே வேளையில் இலங்கை அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரில் 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

இரு அணிகளின் வீரர்கள் விவரம்:

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரிட் பும்ரா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஷ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், சஞ்சு சாம்சன், ரவிந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.

இலங்கை: தசுன் ஷானக(கேப்டன்), சரித் அசலங்கா (துணை கேப்டன்), பதும் நிசங்க, குசல் மெண்டிஸ், தினேஸ் ஜந்திமல், தனுஷ்க குணதிலக, கமில் மிஸ்ரா, ஜனித் லியனகே, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த ஜமீரா, லஹிரு குமர, பினுரா பெர்னாண்டோ, ஷிரன் பெர்னாண்டோ, மகேஷ் தீக்ஷனா, ஜெஃப்ரி வான்டர்சே, பிரவீன் ஜெயவிக்கிரம, ஆஷியன் டேனியல்.

இதையும் படிங்க:இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் கேப்டனாக ரோஹித் சர்மா

ABOUT THE AUTHOR

...view details