தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

Ind Vs Aus : இந்திய வீரர்கள் அபாரம்! இஷான், ஜெய்ஸ்வால், ருதுராஜ் அரைசதம் விளாசல்! - இந்தியா ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட்

Ind Vs Aus 2nd T20 : 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு 236 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 8:57 PM IST

திருவனந்தபுரம் : இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆஸ்திரேலிய அணி தலா 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நடந்து முடிந்தது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த நவம்பர் 23ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த ஆட்டம் கடைசி பந்து வரை சென்ற நிலையில், அதில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சை தேர்வு உள்ளார்.

இந்திய அணியின் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராக் கெய்க்வாட் ஆகியோர் இன்னிங்சை தொடங்கினர். அபாரமாக விளையாடிய இருவரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை திணறடித்தனர். ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பிய இந்த ஜோடி குழுமியிருந்த ரசிகர்களை இடைவிடாது மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர்.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 77 ரன்கள் குவித்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தது. யாஷஸ்வி ஜெய்வால் 25 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து இஷான் கிஷன் மற்றொரு தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுன் இணைந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை கலங்கடித்தார்.

அபாரமாக விளையாடிய இஷான் கிஷன் தனது பங்குக்கு 52 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கியன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நீண்ட நேரம் நீடிக்காவிட்டாலும், 10 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினார். சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ச்சி இருந்தாலும் இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினர்.

கடைசி கட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் (53 ரன்) ரிங்கு சிங் (31 ரன்) இந்திய அணியின் ரன் வேட்டைக்கு உறுதுணையாக இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது. அபாரமாக விளையாடிய ரிங்கு சிங் 31 ரன்களுடனும், திலக் வர்மா 7 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.

ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 2 ஓவர்கள் மட்டுமே வீசிய கிளென் மேக்ஸ்வெல் 38 ரன்களை வாரி வழங்கினார். அதேபோல் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் சீன் அபோட்டும் 3 ஓவர்கள் வீசி 56 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஆஸ்திரேலிய அணி 236 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.

இதையும் படிங்க :Ind vs Aus : டாஸ் வென்று ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு!

ABOUT THE AUTHOR

...view details