அகமாதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து முன்னிலை வகிக்கிறது.
IND vs WI: இந்தியா 238 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்துள்ளது.
இன்று(பிப்.9) இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 83 பந்துகளில் 64 ரன்களும், கேஎல் ராகுல் 48 பந்துகளில் 49 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 238 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் துணை கேப்டன் கே.எல். ராகுலுக்கு ஓய்வளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:IND vs WI: இந்தியா பேட்டிங்; பெஞ்சில் பொல்லார்ட்!