தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IN vs WI T20: இந்தியா வெற்றி... ரோஹித் சர்மா அதிரடி... - India defeat West Indies by 6 wickets

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றது.

India defeat West Indies by 6 wickets in 1st T20 played at Kolkata's Eden Gardens
India defeat West Indies by 6 wickets in 1st T20 played at Kolkata's Eden Gardens

By

Published : Feb 16, 2022, 11:05 PM IST

கொல்கத்தா: இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல்போட்டி இன்று(பிப்.16) தொடங்கியது.

முதலாவதாக டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 157 ரன்களை எடுத்தது. அதன்படி 158 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி வீரர்கள் களமிறங்கினர்.

ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்திய கேப்டன் ரோஹித் சர்மா 19 பந்துகளுக்கு 40 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதனிடையே 3 சிக்சர்களை விளாசினார். அவருடன் களமிறங்கி இஷான் கிஷனும் 42 பந்துகளுக்கு 35 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 18 பந்துகளில் 34 ரன்களை எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். அந்த வகையில் 18.5 ஓவர்கள் முடிவில் இந்தியா 162 ரன்களுடன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒருநாள் போட்டி தொடரைப்போலவே டி20 தொடரையும் இந்தியா கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:IN vs WI T20: இந்திய அணிக்கு 158 ரன்கள் இலக்கு

ABOUT THE AUTHOR

...view details