மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு இன்று (ஆகஸ்ட் 23) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் ஆசிய கோப்பை டி20 தொடரில் பங்கேற்க முடியுமா என்னும் கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக பலப்பரீட்சை நடத்த உள்ளது. இந்தப் போட்டி வரும் 28ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் அதற்குள் டிராவிட் குணமடைந்துவிட்டால் பங்கேற்க வாய்ப்புள்ளது. இல்லையென்றால் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் டிராவிட்டுக்கு கரோனா தொற்று உறுதி
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசியாவில் உள்ள நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான போட்டி தொடரே ஆசிய கோப்பை தொடர். கரோனா ஊரடங்கு காரணமாக 2018ஆம் ஆண்டுக்கு பின் மூன்று ஆண்டுகளாக நடக்கவில்லை. இந்தாண்டு முதல் நடக்க உள்ளது. முதலில் இலங்கையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் பங்கேற்கின்றன. அண்மையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரிலும் டிராவிட் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சர்வதேச போல்வால்ட் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை 3ஆவது இடம்